Course Code: HBC105
Synopsis
மனித நடத்தையினையும், சமுதாய உறவுகளையும் அறிவியல்படி ஆராய முற்படுவதை விவரிக்க ‘நடத்தை அறிவியல்’ மற்றும் ‘சமூக அறிவியல்’ பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பாடம் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளின் வரலாற்றுத் தொடக்கத்தினையும், முன்னேற்றங்களையும் சுருக்கமாக எடுத்துரைக்கிறது; உதாரணமாக, மானுடவியல், உளவியல் மற்றும் சமூகவியல். இதன் மூலமாக, இத்துறைகளில் அதிகமாக ஆராயப்படும் ஒரு மனிதரின் தனித்தன்மை, சமூகமயமாக்கல் மற்றும் சமூக அடுக்காக்கம் போன்ற கருத்துகளுக்கு மாணவர்கள் அறிமுகப்படுத்தப் படுவார்கள். அறிமுகத்தினை நிறைவு செய்யும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் ஆராயும் மேற்கொண்டு கருத்துகளை வழக்கு ஆய்வுகள் மூலமாக முன் நிறுத்தி, ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரச்சினையினை எப்படி ஒவ்வொரு துறையும் அணுகுகிறது என்பதையும், ஏன் ஒருங்கிணைந்த அணுகுமுறையே மிகச் சிறந்தது என்பதையும் காட்டும்.
Level: 5
Credit Units: 5
Presentation Pattern: EVERY REGULAR SEMESTER
Topics
- தற்காலச் சமுதாயத்தினைப் புரிந்துகொள்ளல்
- மானுட நிலையினை ஆராய்தல்
- அறிவுத்துறைகள் - ஓர் அறிமுகம்
- சமூக மற்றும் நடத்தை அறிவியல் துறைகளின் அறிவியல் (I)
- சமூக மற்றும் நடத்தை அறிவியல் துறைகளின் அறிவியல் (II)
- உளவியல்
- மானுடவியல் & சமூகவியல்
- அரசியல் அறிவியல் & பொருளியல்
- ஆய்வு & விசாரணைக்காகப் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்தல்
- வழக்கு ஆய்வு 1: உளவியல்
- வழக்கு ஆய்வு 2: சமூகவியல்
- வழக்கு ஆய்வு 3: அரசியல் அறிவியல்
Learning Outcome
- சமூக மற்றும் நடத்தை அறிவியல் துறைகளின் முக்கிய வரலாற்று மற்றும் தத்துவக் கோட்பாடுகளை விவாதித்தல்.
- முக்கிய சமூக மற்றும் நடத்தை அறிவியல் துறைகளின் வளர்ச்சியினையும், வரலாற்றுத் தொடக்கத்தினையும் விளக்குதல்.
- சமூக நிகழ்வுகளைக் குறித்தான ஆய்வுகளில் சமூக மற்றும் நடத்தை அறிவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் பதங்கள் மற்றும் கருத்துகளில் புரிதலைக் காட்டுதல் (அ) செயல் விளக்கமளித்தல்.
- சமூக மற்றும் நடத்தை அறிவியல் பிரச்சினைகளைத் தீர்க்கத் தகுந்த சமூக மற்றும் நடத்தை அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தல்.
- பொதுவான சமுதாய நிகழ்வுகளுக்குச் சமூக மற்றும் நடத்தை அறிவியல் விளக்கங்களை முன்வைத்தல்.
- ஒரு சமுதாய அல்லது வியாபாரப் பிரச்சினையினைத் தீர்க்கவல்ல ஆய்வு முறையினைக் கண்டறிதல் (அ) இனம் காணுதல்.